பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக மலர்ந்துள்ளது.
தாயை இழந்து, தந்தை அரவணைப்பு இன்றி தவித்ததை விவரிக்கிறது. இளமைப் பருவத்தில் உறவினர் அலைக்கழிப்பால் வழி தவறியதை குறிப்பிடுகிறது.
நகரத்தில் பாலியல் தொழில் செய்த போது பணக்காரர், வணிகர்கள் என பலரது செயல்பாடுகளை குறிப்பிடுகிறது. சமுதாயத்தில் ஒரு இடத்தை தேடும் வாழ்க்கை பயணமாக அமைந்த நுால். – விநா