தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். பழங்காலத்தை மையப்படுத்தி சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது.
மொத்தம், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கதை, ‘நவகண்டம்’ போர் வரலாற்று பின்னணியுடன் படைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையில் வெண்ணிப் போரை முன்னிறுத்தி கதாபாத்திரங்கள் வழியாக நகர்கிறது.
இதுபோல், சும்பன் நிசும்பனின் கதை, உப்பிலிக்கல், நல்லயன் பட்டவனான கதை, அதியமானும் அவ்வையும் போன்ற தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் புதைந்து மறைந்து கிடக்கும் தகவல்களை கதைகளாக வெளிப்படுத்துகிறது. வரலாற்று சம்பவ பின்னணியில் எழுதப்பட்ட கதை தொகுப்பு நுால்.
– மதி