மரபுக் கவிதையால் இயற்றப்பட்ட ராமானுஜர் வாழ்க்கையை சொல்லும் காப்பிய நுால்.
மனிதர்கள் அனைவரும் சமம்; ஏற்றத் தாழ்வும், பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை ராமானுஜர் அருளியதுடன், வாழ்ந்தும் காட்டியதை சுட்டிக்காட்டுகிறது.
ராமானுஜரின் சமய, சமுதாயப் புரட்சி, சீர்திருத்தங்கள் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. வாழ்க்கை நிகழ்வுகள், நபிகளுடன் ஒப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், திருவரங்கம், திருநாராயணபுரம் என நான்கு காண்டங்கள், 66 காட்சிகளில், 16,707 பாடல்கள் உள்ளன. காட்சிகள் காவியமாகவும், ஓவியமாகவும் உள்ளன. கவிதை வரிகளில் வைரமாய் மின்னும் நாடகக் காப்பிய நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்