சுதந்திரப் போராட்டத்தில் தமிழும், தமிழர்களும் இயல், இசை, நாடகம் வாயிலாக எந்த அளவுக்கு பங்கு பெற்றனர் என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் நுால்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, ஹோட்டலில் இலவச உணவு தந்த திருமங்கலம் சங்கர சுப்பிரமணியம் பற்றிய விபரம் உள்ளது. எழுத்தும், பேச்சும் தான் ஆட்சி மாற்றங்களை கொண்டு வந்தது என்பதற்கு சுதேசமித்திரன் சாட்சியாக உள்ளது. கதர் என்பது அரபிச் சொல். அதற்கு மரியாதை என்று அர்த்தம். கையால் நெய்த துண்டுக்கு கதர் என்ற மரியாதை சொல் தமிழில் உருவானது.
இப்படி நாடகம், மேடைப்பேச்சு, திரைப்படத்தால் சுதந்திர வேட்கை வளர்த்தோரை போற்றும் நுால். எளிய எழுத்து நடையில் அமைந்துள்ளது.
– சீத்தலைச்சாத்தன்