தமிழர் வாழ்வில் முக்கிய கடவுளான முருகன் மீது பாடப்பட்ட திருமுருகாற்றுப்படை நுால் தெளிவுரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
செய்யுள்களுக்கு எளிமையான விளக்கம் தந்து, சுலபமாக புரியும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.
பத்துப்பாட்டில் முதல் பாடலாகத் திகழ்கிறது திருமுருகாற்றுப்படை. முருகக் கடவுளிடம் பக்தர்கள் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக மலர்ந்துள்ளதை எளிய நடையில் எழுதப்பட்ட உரை தெரிவிக்கிறது. மூலச் செய்யுளை அடி பிறழாமல் தந்து, அதற்கு உரிய பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
பாடல் பொருளை விளக்க, பழந்தமிழ் நுால்களில் இருந்து கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக்காட்டி சுவாரசியமாக்கும் நுால்.
– ராம்