கிராமப்புறத்தில் பயன்பட்ட பொருட்களையும், அந்த பண்பாட்டு சூழலையும் நினைவில் இருந்து மீட்டு எடுத்து பதிவு செய்துள்ள நுால். உரிய படங்களுடன் சுவாரசியம் தருகிறது.
இன்றியமையாத தகவல் தொடர்பு சாதனமாக இருந்த வானொலி ஒலிபரப்பில் இருந்து நினைவு பதிவு துவங்குகிறது. அதன் செயல்பாடு காட்சிமயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, டூரிங் டாக்கீஸ் இயக்கம், சைக்கிளின் பயன்பாடு பற்றி எல்லாம் தெளிவாக பதிவு செய்துள்ளது.
கிராமிய உணவு கலாசாரம், குடும்பங்கள் இயங்கிய விதம், பயன்பாட்டு பொருட்கள் பற்றி உணர்வு பெருக்குடன் பேசுகிறது. அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றம் சிந்திக்க வைக்கிறது. கடந்து போன சமூக வாழ்வை காட்டும் நுால்.
– மலர்