முகப்பு » கட்டுரைகள் » அப்படியெல்லாம் மனசு

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

விலைரூ.240

ஆசிரியர் : பெருமாள் முருகன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கருத்துரிமையை காப்பது சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு சூழல்களை விவரிக்கும் 27 கட்டுரைகள் உள்ளன.

கருத்துரிமையை வெளிப்படுத்துவதில் இடர்ப்பாடு ஏற்படும் போதெல்லாம், குரல் எழுப்புகிறது. படைப்பாளர்களுக்கு ஆதரவாக விவாதம் புரிகிறது. பிரச்னையின் தீவிரத்தை பல கோணங்களில் அலசுகிறது. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பற்றிய கட்டுரையும் உள்ளது.

சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், அரசின் செயல்பாடுகள், எழுத்தாளரின் செயல்பாடு என பல விஷயங்களையும் அக்கறையுடன் அலசியுள்ளது. சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உள்ள உரிமையை நிலைநாட்டும் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. சமூகம் மேன்மையாக இயங்க உதவும் சிந்தனை உடைய நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us