மறைந்து வரும் சினிமா தியேட்டர்கள் மீதான பார்வையை விமர்சனப்பூர்வமாக முன்வைக்கும் தொகுப்பு நுால். சினிமாக் கலையுடன், மக்களுக்கு ஏற்பட்ட உறவு அனுபவ அடிப்படையில் பதிவாகி உள்ளது.
நவீனமாகி வரும் சினிமா அரங்குகள், பழைய தயாரிப்பு படங்கள், ரசிகர்களின் மனப்பக்குவம், ரசனையில் மாற்றங்களை அலசி ஆராய்கிறது. புத்தகத்தில், 10 தலைப்புகளில் விமர்சனக் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. சினிமா தயாரிப்பு மீதான விமர்சனங்கள், ரசிகர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட பார்வைகள் பதிவாகியுள்ளன.
சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளும், பழைய சினிமா அரங்குகளில் நடந்த மாற்றங்களும் கூர்மையுடன் அலசப்பட்டுள்ளன. வித்தியாசமான கோணத்தில் சினிமாவை அணுகும் நுால்.
– மலர்