நிறுவனங்களை வெற்றிகரமாக நிர்வகிக்கும் வழிமுறைகளை வழங்கும் நுால். அலுவலகம் தொழில் நிர்வாகத்தை பகுதி வாரியாக விளக்கி, சிறப்புடன் செயல்படுத்தும் நடைமுறைகளை உடையது.
நிர்வாக உத்திகளை அனுபவப்பூர்வமாக விளக்குகிறது. தக்க உதாரணங்களுடன் கதை போல் விவரித்து, புரிய வைக்கிறது. அனுபவங்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விவரிக்கிறது. கேள்விகளை கேட்டு, நேரடியாக நிதர்சனத்தை உணர்த்தி பதிலை புரிந்து கொள்ள வைக்கிறது.
ஒரு தொழில் கூடத்தையோ, அலுவலகத்தையோ வெற்றிகரமாக நிர்வகிக்கும் வழிமுறைகளை, 27 தலைப்புகளில் விவரிக்கிறது. ரசனை மற்றும் வர்ணனையுடன் நுட்பங்களையும், உத்தியையும் உடையதாக உள்ளது. நிர்வாகவியலை எளிதாக புரிய உதவும் நுால்.
– மதி