சங்க இலக்கிய மொழித்தன்மை, வாழ்க்கை முறை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலையும் விரிவாக ஆய்வு செய்துள்ள நுால். சங்க இலக்கிய தன்மை பிராகிருதம், சமஸ்கிருத மொழி நுால்களில் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழிலக்கிய மரபின் அடிப்படைகளை சிந்து சமவெளி மற்றும் கங்கைச் சமவெளி அகழாய்வுகள் காட்டும் பண்பாட்டுத் தரவுகளுடன் பொருத்திப் பார்க்கும் நிலையில் இலக்கியச் சூழல்கள் சமஸ்கிருதத்தில் ஏற்படுத்திய சாயல்கள் துலக்கம் பெறலாம் என விளக்குகிறது.
இந்தோ – ஆரிய மரபில் காணப்படும் உட்பொருள் உத்தி, இணைநிலைகள், தமிழ்க்கூறுகள் போன்றவை விரிவாக அலசப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களை மீள்பார்வை செய்ய ஒரு ஆய்வுச் சட்டகத்தை உருவாக்கும் நோக்கோடு படைக்கப்பட்டுள்ளது. ஆய்வுநோக்கில் படிக்க வேண்டிய நூல்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு