அடிப்படை கன்னட மொழி கதவைத் திறக்கும் சாவியாக அமைந்த நுால். குறிப்பாக தமிழ் நன்கு அறிந்தவர்களுக்கு உதவும். பயணங்களில் உபயோகப்படும்.
கன்னட மொழியின் அடிப்படைகளை வழங்குகிறது. புத்தகம் 43 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் கன்னடம் உச்சரிப்பு முதல் எழுத்துக்கள், வார்த்தைகள், எண்கள், பழங்கள் மற்றும் காய்கறி பெயர்கள், குடும்ப உறவுகளுடன் உரையாற்றும் சொற்கள் வரை தரப்பட்டுள்ளன.
காய்கறிக் கடை மளிகைக் கடையில் தொடர்புகொள்வது, கடிதம் எழுதுவது போன்ற நடைமுறைகளை கற்றுத்தருகிறது. தமிழ் மொழி வழியே சொல்லி புரிய வைத்திருப்பதே தனிச் சிறப்பாக உள்ளது. அண்டை மாநில மொழியை அறிந்து சரியான வழிகாட்டுதலுக்கு உதவும் வகையிலான நுால்.
– வி.விஷ்வா