சிவன் செய்த லீலைகளை சொல்லும் புராண நுால். சிவன் வடிவங்கள், ஜோதிர் லிங்கம், நான்முகன், ருத்ரர்கள், சிவலிங்க பூஜை முறை உட்பட, 41 தலைப்புகளில் உள்ளது.
சிவனின் பஞ்ச பிரம்ம ஐந்து முகங்களில் சத்யோஜாதத்தில் இளையவனாய், வாமதேவத்தில் சடையில் பாம்புடனும், தத்புருஷத்தில் இளம்பிறைசூடியும், அகோரத்தில் தீயும் வாளும் ஏந்தியும், ஈசானத்தில் ஆலகால நஞ்சு அருந்தியும் காட்சி தருவதை கூறுகிறது.
சிவனுக்கு உருவம் இல்லை. விரும்பிய உருவில் வழிபடலாம். தருமத்துக்கும் மேலானது தவம். தவத்திற்கும் மேலானது மந்திரம்; மந்திரத்திற்கும் மேலானது தியானம். தியானத்திற்கும் மேலானது சிவலிங்க வழிபாடு என்பதை விளக்குகிறது.
வீரம், கருணையுடன் விளங்கும் சிவன் பெருமைகளை கூறும் பக்தி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்