(பக்கம் 320) சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஆன்மிக இதழ் சார்பாக வெளிவந்த தீபாவளி மலர் என்பதால், முற்றிலும் தத்துவம் தொடர்பான கட்டுரைகள் அதிகம். பந்தம் விடாவிட்டால், நிற்கிற இடத்திலேயே நிற்கும் படகு போல என்று சுகிசிவம் விளக்குகிறார். சோம்பேறிகளாக இல்லாமல், தினமும் 18 மணிநேரம் பணியாற்ற, ஒவ்வொருவரும் ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.ரிக் வேதமும் அது காட்டும் சில காட்சிகளும் புஷ்பா தங்க துரையால் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆசையுடையவர்களையும் ஆசையற்றவர் ஆக்குபவர் சத்குரு என்றும், இது தன்னுடையது என்ற விருப்பம் இல்லாதவர் என சிருங்கேரி மடத்தின் 33 பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி தன் உபதேசப் பகுதியில் விளக்கியிருப்பது வித்தியாசமானது. அது இம்மடத்தின் தனிச்சிறப்பைக் காட்டுகிறது, கலியன் சம்பத் இந்து மதத்தின் சிறப்புகளை ஆய்வு செய்திருக்கிறார். சிறுவர்களுக்கு என்று தனிப்பகுதி, மற்றும் கங்கா ராமமூர்த்தி <உட்பட பலரது படைப்புகள் மலரை அலங்கரிக்கிறது. தீபாவளி நாளில், அஞ்ஞானம் போக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று, ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் தன் அருளுரையில் கூறியிருக்கிறார். மொத்தத்தில், தத்துவ ஆசை கொண்டவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.