காதல், காமம் பற்றி அறிவூட்டி உடல் பதற்றத்தை தணிக்கும் நுால். திருமண வாழ்வு சலிப்பும், கசப்பும் இன்றி அமைய ஆக்கப்பூர்வமாக வழிகாட்டுகிறது.
தாம்பத்திய உறவில் சிக்கல்களை வெளிப்படுத்தி, நிலவும் மனத்தடையை சுட்டிக்காட்டுகிறது. பாலின பாகுபாட்டால் படுக்கையில் துயிலும் அறியாமையை புரிய வைக்கிறது. இரு பாலருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை எடுத்துரைக்கிறது. அது போன்ற நிலை தொடர்வதால் சமூகத்தில் வன்முறை அதிகரிப்பதை விளக்கி எச்சரிக்கிறது.
பாலின ரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வு மனத்தடையை நீக்க ஆலோசனை வழங்குகிறது. காதலும், காமமும் பொதுவானது என கற்பித்து, நல்லுறவுக்கு வழிவகுக்கிறது. திருமண உறவு வலுவாக வாய்ப்புகளை முன்வைக்கிறது. உடல் உணர்வுகளை அறிவியல் பூர்வமாக விளக்கி புரிய வைக்கும் நுால்.
– மதி