கவியரசர் கண்ணதாசனின் 17 திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்புகளை ஆராய்ந்து விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுால். நுட்பமான பார்வையோடு அலசப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடலின் பின்புலமும் சமூக நோக்கில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கிய ‘ஆறு மனமே ஆறு...’ பாடலுக்கான விளக்கம், எவரது வாழ்க்கைக்கும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
எத்தனை கடின தத்துவத்தையும் எளிமையாக தரவல்லவை என்பதை புலப்படுத்துகிறது. விரக்தி, துயரம், ஏமாற்றம், வெறுப்பு, மகிழ்ச்சி, அன்பு போன்ற சூழலுக்காக எழுதிய தன்னுணர்ச்சிப் பாடல்களை எடுத்து ஆராய்ந்து தந்திருக்கிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு