(பக்கம்: 160.) குரு பகவானின் அழகிய அட்டைப் படத்துடன், இந்த ஆண்டு மஞ்சரி தீபாவளி மலர் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. உள்ளே ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் கண்கவர் வண்ணப் படம். கா.ஸ்ரீ. ஸ்ரீ.,யின் அற் புதமான படைப்பு. முதல் தரிசனம் என்ற பகுதியில் பரமாச்சாரியாரைத் தரிசனம் செய்த அனுபவமும், மெய் ஞானியான சுவாமி விவேகானந்தரைத் தரிசனம் செய்த அனுபவமும் சுவைபட சொல்லப் பட்டிருக் கிறது. பழமை யைப் போற்றும் வகையில் சில புதுமையை வரவேற்றுச் சிறப் பிக்கும் வகையில் சில, கலைத் துறை பற்றிய கட்டுரைகள் சில, மருத்துவப் பகுதி என - பல தரப்பட்ட விஷயங்களை "மஞ்சரி என்ற பெயருக்கு ஏற்ப அழகாக, நேர்த் தியாக தொகுத்து வழங்கியிருக்கின்றனர். சிறுகதைகளைப் பொறுத்தவரை, தமிழ், சம்ஸ்கிருதம், உருது என மூன்று மொழிகளின் பெயர்ப்புக் கதைகள் மலருக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.