புகழ்பெற்ற நீதிக்கதைகளை தேர்வு செய்து, மாணவ – மாணவியர் எளிதில் புரியும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு கதையும் வாழ்வதற்கு இன்றியமையாத அறத்தை வலியுறுத்திக் கூறியுள்ளது.
ராமன், சிறுவயதிலே சிறந்த தீர்ப்பு கூறி, ‘மரியாதைராமன்’ ஆன கதை முதலில் உள்ளது. மூதாட்டிக்காக கூறிய தீர்ப்பால், சிறுவயதிலே நீதிபதியான கதை கவனிக்க வைக்கிறது. பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இருப்பதும் பறிபோகும் என காட்டுவதில் நகைச்சுவை கலந்துள்ளது. இதே கருத்தில் இன்னும் சில கதைகள் உள்ளன.
கோழி திருடியவர்களை கண்டுபிடிக்கும் கதையில் சுவாரசியம் உள்ளது. அடுத்தவரின் நிலத்தை அபகரித்த தவறை சுட்டிக்காட்ட, செய்த செயல் கவனிக்க வைக்கிறது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் நுால்.
– முகில்குமரன்