தமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவக் கூறுகளை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். விரிவாக அணுகி, விமர்சனங்களை முன்வைக்கிறது.
இலக்கியங்களில் பின்நவீனத்துவம் என்ற தத்துவ அணுகுமுறை கூறுகளை விவரிக்கிறது. இது தொடர்பாக, 10 கட்டுரைகள் உள்ளன. முதலில், இந்த சிந்தனை தமிழுக்கு அறிமுகமானதை விவரிக்கிறது.
தொடர்ந்து, பல கோணங்களில் இந்த தத்துவம் சார்புள்ள இலக்கியங்கள் அலசப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பினரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி சூழலுக்குள் வந்துள்ள புதிய தத்துவத்தின் தாக்கத்தை உரைக்கும் நுால்.
– மதி