சங்க இலக்கியத்தில் சுவைமிக்க வாழ்க்கை நிகழ்வுகளை, சுவாரசியம் குன்றாமல் தரும் தொகுப்பு நுால். அழகிய ஓவியங்களுடன் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
மொத்தம், 25 படைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சங்கப்பாடலை பின்புலமாகக் கொண்டுள்ளது. பாடல் குறிப்பிடும் பொருள் சுவையுடன், பழங்கால சமூக அமைப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. காதல், குடும்ப அமைப்பு, சமூகத்தில் நிலவிய நம்பிக்கை என பல செயல்பாடுகள் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளன.
பாடல்களில் பொதிந்துள்ள இலக்கிய மேன்மையும், வாழ்வின் உள்ளுறையும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் கவரும் விதமாக வடிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் வாழ்வை படம் பிடிக்கும் நுால்.
– ஒளி