அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி மற்றும் குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை என்ற பக்திப் பாடல்களை தொகுத்து உரைகளுடன் தரப்பட்டுள்ள புத்தகம்.
புத்தகத்தின் துவக்கத்தில், அபிராமி பட்டரின் வாழ்க்கை வரலாறு விரிவாகத் தரப்பட்டு உள்ளது. அதில், இயற்பெயர் தெரியாததால், திருக்கடவூர் திருத்தல நாயகி அபிராமி அன்னையை எப்போதும் போற்றிப் பணிந்ததால், அபிராமி பட்டர் என்றே அழைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டரின் பக்தியால் உருகிய அன்னை அபிராமி, காதில் அணிந்திருந்ததை வான வீதியில் எறிய, முழு மதியாக உருவம் எடுத்த வியப்பை விளக்குகிறது. பட்டரின் பக்தியை வெளிப்படுத்தும் பயனுள்ள உரை நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து