இறைவன் எதிர்பார்ப்புகளை மனிதன் நிறைவேற்றுவது குறித்து விளக்கும் நுால். மனித உடல் தான் சிறந்த விஞ்ஞானம் என்கிறது. அழுகை, சிரிப்பு, சோகம், கோபம், காமம், பொறுமை, பொறாமை உள்ளிட்ட சிறப்பு தன்மைகளுக்கு விளக்கங்கள் உள்ளன.
ஆவிகள் கடவுளைவிட உயர்ந்த சக்தியா என விளக்கம் தருகிறது. மனிதர்கள் இந்த பூமியில் அடையும் புகழ், அவமானம், மரணம் ஆகியவை உண்மையல்ல. வானுலகில் கிடைப்பது தான் உண்மையானது என கூறப்பட்டுள்ளது. பூமியில் உள்ள அனைத்தும் மாயை என அறிவுறுத்துகிறது. பெண்களின் முக்கியத்துவம் பேசப்பட்டுள்ளது. பேயாடல், சாமியாடல் எதனால் வருகிறது என்பதற்கு நீண்ட விளக்கத்தை அளித்துள்ள நுால்.
– முகில்குமரன்