ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, ‘பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்’ புத்தக தமிழாக்கத்தின் மறுபதிப்பு நுால். இது, 220 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
பூலோகத்தில் இருந்து பரலோகத்துக்கு யாத்திரை போவதை சொப்பனப் பாங்காய் சொல்கிறது. முதல் பகுதியில் பிரயாண ஆவல், கையில் புத்தகம், முதுகில் பாரச் சுமையுடன், கண்ணீர் விட்டு புலம்பி வீடு செல்கிறான் ஒருவன். அங்கு வந்த சுவிசேஷகனிடம் தன் மரணம் பற்றி அழுது உரையாடுகிறான்.
அவன் சொப்பனம் தொடர்கிறது. ஆத்ம ரட்சிப்பைத் தேடுகிறான். நடுவில் பாடல் இசைக் கீர்த்தனைகள் தரப்பட்டுள்ளன. தைரியமுள்ளவன் சோதனையை சகித்து ரட்சிக்கப்படுவான். வெறுப்பும் கோழைத்தனமும் உள்ளவன் பின்னடைவான் என்ற நீதியை வலியுறுத்துகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்