பொதுவுடைமை இயக்க தலைவர் சிங்காரவேலர் தன் வீட்டில், மிகக் குறைந்த வாடகையில் பாவேந்தர் பாரதிதாசன் தங்க அனுமதித்திருந்தார். அங்கிருந்த நுாலகம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்து, படைப்பு எழுச்சிக்கு துாண்டியது போன்ற செய்திகளை தரும் நுால்.
‘மனிதர்கள் சமமே என்று சொல்வோம். வளரும் பேதத்தை வெல்வோம். வாத்ஸல்யாம் வேண்டும், பொறுமை வேண்டும்’ என, பாவேந்தர் சமதர்மம் பேசியதை குறிப்பிடுகிறது.
ஆணவ படுகொலைகள் நடந்திருந்ததை காட்டுவது தான், இளவரசி அமுதவல்லி காதல் காவியமாக மலர்ந்துள்ளது. ஆரம்ப காலத்தில் முழுக்க ஆத்திக கவிஞராக இருந்ததை அறிய முடிகிறது. உலகப்போரில் ஹிட்லர் தோல்வியடைந்ததை மகிழ்ச்சியுடன் பாடியதையும் குறிப்பிடுகிறது.
– சீத்தலைச் சாத்தன்