(பக்கம்: 342.) காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் அறவுரையுடன் ஆரம்பமாகும் கலைமகள் மலரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இளைஞர்களின் தனித்தன்மைகள் பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். வாகீச கலாநிதி கி.வா.ஜ., வின் சிறு கதை மறு பிரசுரம் பெற்றிருக் கிறது. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர் களின் படைப்புக் கள் மல ருக்கு அழகு சேர்த்திருக் கிறது. லா.சு.ரங்க ராஜன், குருவைத் தேடிய மகாத்மா என்ற கட்டுரையில் மகாயோகி ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க எடுத்த முயற்சி எப்படி வெற்றி பெறாமல் போய்விட்டது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். நிறைய புதிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. ரமண மகரிஷியின் ஆத்மார்ந்த சிஷ்யரான பி.ஆர்.குமார், ரமண பகவானைப் பற்றி எழுதியிருக்கிறார். இறையன்பு ஐ.ஏ.எஸ்.,-ன் இலக்கியச் சுற்றுலா ஒரு தரமான இலக்கியக் கட்டுரை, இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய பதினெட்டு சித்தர்கள் ஒரு பார்வை, ஆய்வு நோக்கில் அமைந்திருக்கிறது. கனமான விஷயங்களை உள்ளடக்கிய கலைமகள் தீபாவளி மலர், தனிச் சிறப்புடன் மிளிர்கிறது.