திரைப்படத் துறையில் பணிபுரியும் துணை நடிகர்களின் இன்னல்கள் குறித்தும் பேசியுள்ள நுால்.
திரைப்படத்திற்கான ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் நடிக்க நான்கு பெண்களை அழைத்து வரும்படி இயக்குனர் கூறுகிறார். மூன்று பெண்கள் கிடைத்த நிலையில் ஒருவரை தேடுகிறார் ஏஜெண்ட். அப்பகுதியில் வசிக்கும் விலைமாதுவை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
படப்பிடிப்புக்குச் சென்றவள் மீது, கதாநாயகன் ஆசைப்படுகிறான். ருசித்து விட்டு பணம் தராததால் பிரச்னை ஏற்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பெண்ணுக்கு ஆதரவாக பேச, கதாநாயகன் காரில் தப்பிய போது விபத்தில் இறக்கிறான். திரைப்பட பணி முடங்குகிறது. இயக்குனர் தவிக்கிறார். அப்பெண் அவருக்கு உதவ முன்வருகிறாள். திருப்பங்கள் நிறைந்த நாவல்.
– முகில் குமரன்