பழந்தமிழ் இலக்கியம் போல படைக்கப்பட்டிருக்கும் காதல் காவியம். காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பெண்ணை, ஆலை அதிபரான பண முதலைக்கு கட்டி வைத்தனர். அவன் தொழிற்சங்கவாதி ஆகிறான். பண முதலை விருப்பத்திற்கு பணிய மறுக்கிறார் மனைவி. ஆலையில் நடந்த போராட்டத்துக்கு தலைவனாகிறான் காதலன். பண முதலையின் குண்டடிக்கு காதலனுடன் பலியாகிறாள் அந்த பெண்.
வழக்கமான கதை தான் என்றாலும் கவிதை வரிகள் அபாரம். ‘நான் வஞ்சி எனும் பெயர் சொன்னால் அழகு வந்து வணங்குமடி’ என்று துவங்கி, ‘குழலில் வண்டு இருக்கும் கெஞ்சுமடி மயில்வந்து நடையைக் கண்டு’ என வருணிக்கும் அற்புத கவியழகுகளை கொண்டுள்ள நுால்.
–
சீத்தலைச் சாத்தன்