இலக்கிய நயம், படைப்பாளுமை, விமர்சன கூர்மை உடைய படைப்பாளி ரகுநாதன் எழுதிய, 10 நாடகங்களின் தொகுப்பு நுால்.
போர்களில், ஆயுதங்கள் மட்டும் மோதுவதில்லை; கருத்துகளும், அரசியல் தந்திரமும் பயன்படுத்தப்படும் என்கிறது. பணத்தை மையமாக கொண்டதா திருமண பந்தம் என, ‘பெரிய இடத்து சம்பந்தம்’ நாடகம் கேள்வி கேட்கிறது.
பெண்ணுக்கு, பிறந்த வீடும், புகுந்த வீடும் சமம் என, ‘பெண்ணாய் பிறந்தால்’ என்ற நாடகம் உணர்த்துகிறது. பாத்திர படைப்பும், மொழி நடையும் எளிமையாக தரப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று, மறுமணம், ஜாதி மறுப்பு, விடுதலை உணர்வை வெளிப்படுத்துகிறது.
சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. நாடகம் எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்