கண்டவற்றையும், கேட்டவற்றையும், படித்தவற்றையும் உள்வாங்கி புதிய அணுகுமுறையோடு வெளிப்படுத்தும் நுால். அனுபவமிக்க எழுத்தின் முதிர்ச்சி ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறது.
நாட்டு நடப்பு, அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களால் பெற்றிருக்கும் வளர்ச்சி, மாறி வரும் சூழல் என பல கோணங்களில், 50 தலைப்புகளில் சுவாரசியமாக தருகிறது. செய்தித்தாள் வாசிப்பதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விளைவுகள் போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளது.
பட்டாம் பூச்சி, பாம்பு, யானை, தவளை, வெள்ளைப் புலிகள் பற்றிய புதிய அறிவியல் தகவல்கள் தரப்பட்டுள்ளன. திருநங்கையர் பற்றிய வரலாற்றுச் செய்திகள், உப்பு வரலாறு போன்றவை அறிவுக்கு விருந்தாகும். பயனுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் உடைய நுால்.
– ராம.குருநாதன்