கதைகள் வாயிலாக மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ள நுால். பணத்துடன் வாழ்வது சிறப்பல்ல; நிம்மதியுடன் நோயற்ற வாழ்வே செல்வம் என அறிவுறுத்துகிறது.
பெண்கள் தற்போது ஆண்களுக்கு சமமாக உள்ளனர். இவர்களை, நவீன அவ்வையார் என, சங்க இலக்கிய பாடலிலும் காட்டப்பட்டுள்ளது. காலம் கரைந்து கொண்டிருக்கிறது; அதை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வலியுறுத்தும் கதை அருமை. அடுத்தவரின் நேரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையும் கூறப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல், நேர்மையுடன் உழைப்பும் சேர்ந்தால் வாழ்க்கை மேம்படும் என்பதை வலியுறுத்தும் விவேகானந்தர் அறிவுரையும் உள்ளது. ஆர்வத்தை துாண்டும் நுால்.
– முகில்குமரன்