இல்லறம் பேணுவதில் கணவன் – மனைவி அந்தரங்க உறவில் தேவையான கூறுகளை விவரிக்கும் நுால். சிற்றின்பம் முழுமை பெற முறையான அணுகுமுறையை விளக்கியுள்ளது.
எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உணர்வு, மனித இனத்துக்கு மாறுபட்டுள்ளதை விளக்குகிறது. அன்பால் கட்டமைத்து உடல் சார்ந்த புரிதலோடு வெற்றி காண வேண்டும் என விவரிக்கிறது. முரண்பட்ட சிற்றின்ப அணுகுமுறையால் இல்லறமே உடையுமளவு சிக்கல்கள் உண்டாகி விடுவதை எடுத்துக்காட்டுகிறது.
புணர்ச்சிகளில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய துாய்மை பற்றி அறிவுறுத்துகிறது. புணர்ச்சி வகைகளில் உள்ள உணர்ச்சிகள் நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளன.
பாலியல் கல்வி நோக்கில் அறிய வேண்டிய தகவல்களை உடைய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு