தாயுடன் வாழ்ந்த அனுபவத்தை முன்வைத்துள்ள நுால். நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு மொழி எழுத்தாளர் படைப்பு, மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொழில், வியாபாரம் என துடிப்புடன் செயல்பட்டு வந்த பெண், முதுமைக் காலத்தில் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார். கடந்து வந்த பாதையை முற்றாக மறந்து விடும் தாயை, மீட்க முயலும் மகளின் அனுபவமாக மலர்ந்துள்ளது.
பெண்ணின் துடிப்புமிக்க செயல்பாட்டை வெளிப்படுத்துவதுடன், தாய் – மகள் இடையேயான பாசத்தையும், அதன் ஊடாக வந்த பிணக்குகளையும் துல்லியமாக வடித்துக் காட்டும் நுால்.
– மதி