தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியங்கள் தொடர்பான 20 கட்டுரைகளை உடைய தொகுப்பு நுால். கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டவையும், இதழ்களில் வெளியானவையும் உள்ளன.
தமிழர் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. சமூகவியல் பார்வையில் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பழந்தமிழகத்தில், ‘மூக்கரி பழக்கம்’ என்ற நடைமுறை பற்றி சுவாரசிய தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் நடந்த மூக்கு அறுப்பு நிகழ்வுகளுக்கு தக்க விளக்கம் தருகிறது.
ஜோதிடக் கலை குறித்த கருத்தையும் முன் வைத்துள்ளது. பழங்குடி மக்கள் வாழ்வும், பண்பாடும் ஆராயப்பட்டுள்ளது. பழங்காலத்தில் நிலவிய தேர்தல் முறை குறித்த தகவல்களும் உள்ளன. தமிழர் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து ஆதாரங்களுடன் தகவல்களை தந்துள்ள நுால்.
– மதி