சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், ராமகிருஷ்ணர், பகவான் ஸ்ரீ ரமணர், மகாவீரர், முஹம்மது நபி, ஸ்ரீ ராமானுஜர், மகான் புத்தர் மற்றும் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் உட்பட ஆன்மிக பிரமுகர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை வழங்கும் நுால். ஆன்மிகத்தில் ஆழமான தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சமண மதத்தை நிறுவிய மகாவீரர், அரச குடும்பத்தில் பிறந்து தன்னலமற்ற செயல்கள் மற்றும் தத்துவ நுண்ணறிவால் நிரம்பியதை குறிக்கிறது. அவரது போதனைகள் அகிம்சை, உண்மைத்தன்மை, இரக்கத்தை வலியுறுத்துகின்றன.
பெரியோர்களின் ஆன்மிக தொண்டும், பங்குடன் ஞானம், நுண்ணறிவு பற்றி எல்லாம் பேசுகிறது. காலம் போற்றும் ஆன்மிக பணிகளை விவரிக்கும் நுால்.
– வி.விஷ்வா