முகப்பு » பொது » ஆம்; நம்மால் முடியும்

ஆம்; நம்மால் முடியும்

விலைரூ.150

ஆசிரியர் : வைகோ

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: 978-81-8476-151-1

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84


உலகில் வாழும் அனைத்து மனித இனங்களும் சம உரிமை பெற்று வாழும் சுதந்திர உணர்வு படைத்தவை. ஆண்டான் _ அடிமை என்று பாகுபாடு இல்லாத உலகத்தைத்தான் அனைத்து இன மக்களும் விரும்புகின்றனர்.
உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து, அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி மாளாது.
வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா மட்டும் அல்லாமல், தென் ஆப்பிரிக்கா உட்பட உலகின் ஏனைய நாடுகளிலும் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. ஒவ்வொரு நாட்டிலும் தன்னலமற்ற தலைவர்கள் தோன்றி இன வெறிக்கு எதிராகப் போராடினார்கள்.
அந்த வகையில், ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங் வழியில், அமெரிக்காவிலிருக்கும் கறுப்பு இன மக்களுக்கு விடிவெள்ளியாகத் தோன்றி, அங்கே அதிபர் வேட்பாளராக போட்டியிடும் தகுதிக்கு உயர்ந்திருக்கிறார் பாரக் ஒபாமா!
கண்டங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ள ஒபாமாவின் ஆற்றல், இயங்கும் வேகம் பற்றியும், கறுப்பு இன மக்கள் படிப்படியாக
விழிப்பு உணர்ச்சி பெற்று தலைநிமிர்ந்த வரலாற்றையும் இணைத்து
‘ஆம்; நம்மால் முடியும்!’ என்ற தலைப்பில் ‘சங்கொலி’யில் வைகோ எழுதிய உணர்ச்சிமிக்க தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
‘அமெரிக்கக் குடியரசுத் தலைவராக ஒபாமா வெற்றி பெற்றால், அமெரிக்காவில் மட்டும் அல்ல... உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஒரு புதிய விடியல் உதயமாகும்’ என்ற நம்பிக்கை மேலோங்க, தனது வசீகரமான, புரட்சிகரமான
புயல் நடையில் எழுதியிருக்கிறார், கடந்த ஜூலையில் ஒபாமாவை நேரில் சந்தித்துவிட்டு திரும்பிய வைகோ.

Share this:

வாசகர் கருத்து

- ,

vaiko without politics is a wonderful person.We see C.N.A.'s image, influence , humanitarianism and extensive knowledge both in Tamil and English.

111k/27k,p - Thoothukudi,இந்தியா

indraiya arasiyal vathikalil miga siranthavar

- ,

best wishes mr.vaiko.

- ,

halo sir very useful to me for my self confidend increase after read the book thankvery much my honorable leader vaiko

- ,

He is a good and responsible person.

- ,

Anbulla, VAIKO Annan avarkallukku Thambiyin Thazhavana Vhendukol. Nan Ennudayiya srivaiyathirenthu Parkiren,Khetkiren. Padikiren.Ulaga varalaru ullor makalluku Puriyavillaiya.Konjam Purira mathira Pesunkul.

Tamannaa Rasigan - TEXAS,யூ.எஸ்.ஏ

waste book written by waste man kovaalsaamy

SABARI - ERODE,இந்தியா

உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம்

Anandhi Sundarraj - chennai,இந்தியா

good

Anandhi Sundarraj - chennai,இந்தியா

nice

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us