பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை உடைய இந்திய மண்ணின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். அண்டை மாநிலங்களில் கலையின் சிறப்புகளை எளிய நடையில் தருகிறது. பல மொழி படைப்புகள் தமிழாக்கி தொகுக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, ஒரியாவில் இருந்து கேரளா வரை பிற மொழிகளில் இன்று இலக்கியம் எப்படி தடம் பதித்து வருகிறது என்பதை தொகுத்து தருகிறது.
ஒரு பிரச்னையின் பல்வேறு தன்மைகளை இந்திய நிலப்பரப்பில் மக்கள் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை மிக நுட்பமாக சொல்கிறது. மன உணர்வுகளுக்கு விடை தேடும் வகையில், பல மொழிகளில் வெளியாகி வரும் இலக்கிய படைப்புகளின் சிறப்புகளை வெளிப்படுத்துகிறது. இந்திய இலக்கிய வளத்தை காட்டும் நுால்.
– மதி