புகழ்பெற்ற நகரத்தார் சமூகத்தின் சிறப்பான செயல்பாடு, பண்பாட்டு நடைமுறை பற்றி எடுத்துரைக்கும் நுால். செல்வத்தை திரட்டியதுடன் நற்காரியங்களுக்கு பயன்படுத்தி வருவது பற்றி தெளிவாக தகவல் தருகிறது.
நகரத்தார் சமூக மக்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வழிபாடு, பண்பாடு, நாகரிகம் பற்றிய விபரங்களை உடையது. சிறிய தலைப்புகளில் எளிதாக புரியும் வகையில் தொகுத்து திரட்டப்பட்டுள்ளது.
நகரத்தார் வசிப்பிடங்கள், செட்டி நாட்டின் சிறப்புகள், திருமண சடங்கு நடைமுறைகள் பற்றி தெளிவாக தகவல்கள் தரப்பட்டுள்ளன. நகைகளின் விபரம், கடைப்பிடிக்கும் மருத்துவ முறைகளும் தரப்பட்டுள்ளன.
நகரத்தார் சமூகத்தின் பண்பாட்டை தெள்ளத்தெளிவாக விளக்கும் நுால்.
– ராம்