மகாபாரதத்தில் சிதறல்களாகக் கிடக்கும் பாத்திரக் கதைகளை தொகுத்து சொல்லியிருக்கும் நுால்.
மகாபாரத கதாபாத்திரமான பீஷ்மரை முன்வைத்து, அவர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மகாபாரதமே நேர்ந்திருக்காது என்பதற்கான சாத்தியங்களை விவரிக்கிறது. அம்பை இடம் பெறும் இடங்களையும், பீஷ்மரின் செயல்பாடுகளையும் மட்டும் தனித்துப் பிரித்து தந்திருப்பது தனி தொடர்ச்சியுடன் உள்ளது.
பீஷ்மரை அழிக்கும் பொருட்டு, தவமிருந்து துருபதன் குழந்தை சிகண்டி திருநங்கையாக பிறப்பது உட்பட கதை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு