கவிஞர் அறிவானந்தம் எழுதிய சிற்றிலக்கிய பாடல்கள் மீதான ஆய்வுரைகள் அடங்கிய நுால். நாகேஸ்வர நான்மணிமாலை தன்மையை விளக்கும் நோக்கில் ஆன்மிகக் கருத்துகள், சிவன் சிறப்புகள், சைவ சித்தாந்த கருத்தியல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
மனிதரை பிணித்திருக்கும் மும்மலங்களான பசு, பதி, பாசத்தின் தாக்கங்களை விளக்கி, இறைமையுடன் இணையும் கருத்துகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பாடல் வரிகளோடு தொடர்புடைய புராணக் கதைகளுடன் திருமந்திரம், தேவாரம், திருவாசகத்திலிருந்து மேற்கோள்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சிவத்தல வரலாற்றுக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு