இலங்கை எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகள் குறித்து விமர்சனமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தோல்விகள் எல்லாம் தோல்விகளல்ல; வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல; வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை புரிந்து, எதார்த்தத்தை ஏற்க வேண்டும் என்பதை எளிமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறது.
படைப்புகளை ஆராய்ந்து, சிந்திக்க வைத்த கதைகள் குறித்தும், பெண்களை ஈர்க்கும் எழுத்துக்கள் குறித்தும், சமூக மாற்றத்திற்கான குரலே கதைகளாக வெளிப்பட்ட படைப்புகள் குறித்தும் உள்ளது. எழுத்தாளரை அனைத்து கோணங்களிலும் காட்டுகிறது.
விமர்சன ரீதியாக படைப்பாளரின் ஆக்கங்கள் குறித்தான தொகுப்பு, பன்முகத் திறமையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு