காலை எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்லும் வரை சொல்ல வேண்டிய மந்திரங்களை தெரிந்து கொள்ள உதவும் நுால். மந்திரங்கள் ஜெபித்தால் மனம் செம்மையாகும். மனம் செம்மையானால் இறைத்தன்மையை உணர முடியும் என்று கூறுகிறது.
ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு ஏழு விதமான பண்புகள் உள்ளன என்று கூறி அவற்றின் விளக்கம் உள்ளது. காலையில் எழுதல், பல் துலக்கிய பின் குளித்தல், விபூதி அணிதலின் போது கூற வேண்டிய மந்திரங்கள் உள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம், ராம நவமி நாட்களில் சொல்ல வேண்டிய மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து