தமிழக கோவில்களின் சிறப்பு அம்சங்களை உரைக்கும் நுால். வெளிநாட்டு கலைத் தொடர்பு, தல மரங்களின் முக்கியத்துவம், தீர்த்தங்கள் குறித்த செய்திகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன.
இந்த புத்தகம், 25 கட்டுரைகளை உடையது. முதலில் பனை மரத்தை சிவனாக போற்றும் மரபுவழி வழிபாட்டு விபரங்களை விரிவாக தந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி மத்திய பிரதேச மாநிலம், போபால் அருங்காட்சியகத்தில் உள்ள பனை மர வழிபாடு சிற்பம் குறித்த செய்திகளை படத்துடன் விளக்கமாக எடுத்துரைத்துள்ளது.
ராஜஸ்தான், குவாலியர் அருங்காட்சியகத்தில் பனை மரமே, சிவலிங்க வடிவமாக இருக்கும் சிற்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழக கோவில்களின் சிறப்பு, முக்கியத்துவத்தை விவரிக்கும் நுால்.
– மதி