வேத நெறி, சனாதனம், சத் சங்கம் போன்ற ஆன்மிக நெறிகளை கூறும் நுால். பிரம்மம், சத்குரு, சத் சங்கம், அஷ்டாங்க யோகம், முக்தி பற்றி உரைக்கிறது.
அந்த காலத்தில் தம்பதி உடல், மனம், புத்தி, பிராணன் ஒன்றி, 95 வயது வரை வாழ்ந்து, ஒரே வினாடியில் இருவர் ஜீவன்களும் பிரிந்து சொர்க்கம் செல்லும். இன்று லாபம், நஷ்டம் பார்த்து வாழ்வதை பற்றி பேசுகிறது. வியாசர், வள்ளலார் கவிதை பாடிய பின்னணியை குறிப்பிடுகிறது.
இறைவன் வழிகாட்டியபடி, விவேகம் உள்ளவன் நீண்ட நாள் வாழ்வான். இதற்கு, தியானம் மிகுந்த பயன் தரும். ஆக்ஞா பீடத்தில் தவம் செய்தால் எல்லா ஞானிகளையும் தரிசிக்கலாம். முதுமையைப் போற்றி இறையை உணர அறிவுரைக்கும் நுால்.
-– முனைவர் மா.கி.ரமணன்