அரசு பணியாளரின் தன் வரலாற்று நுால். மக்கள் பிரதிநிதி, அதிகாரிகளின் முறைகேடுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ரயில் தண்டவாளத்தைக் கடந்த போது போலீசார் 5 ரூபாயை பறித்துக் கொண்டு அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளார். அந்த கால அரசியலில், ஊழல் குறித்தும் தகவல்களை அளித்துள்ளார். பள்ளிக்காலம், ஊர் திருவிழாக்கள், ஆசிரியர்கள், ஹிந்தி எதிர்ப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த போது, கிராமத்தில் நடந்த வேடிக்கை சம்பவங்கள் ரசிக்கும் படி கூறப்பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர் சங்கம் உதயமான வரலாறும் உள்ளது.
அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் சம்பவங்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவளித்த அமைச்சர் என விவகாரங்கள் நிறைய உள்ளன.
– முகில் குமரன்