தமிழகத்தின் தென் மாவட்ட பகுதியில் தோன்றி புகழ்பெற்ற மூன்று சிற்றிலக்கியங்கள் உரையுடன் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. கழுகுமலை காவடி சிந்து, குற்றால குறவஞ்சி, முக்கூடற்பள்ளு ஆகியவை அந்த நுால்கள். அவை உரிய அறிமுகத்துடன் தரப்பட்டுள்ளன.
சிற்றிலக்கியங்கள் பற்றிய தெளிவான விளக்கம் கூறப்பட்டுள்ளது. அவற்றின் கூறுகள், பாமர மக்களுடன் இருந்த தொடர்புகள், வாழ்வுடன் கலந்திருந்தது பற்றி விளக்கமாக தருகிறது. சிற்றிலக்கியம் சார்ந்த நிகழ்த்துதலையும் தெளிவாக உரைக்கிறது.
பக்தி மயமாக நடக்கும் காவடியாட்ட சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது. காவடிகள் அலங்கரிக்கப்படும் விதம், அவற்றை துாக்கியாடும் நடனமுறையையும் தெரிவிக்கிறது. மக்கள் இலக்கியத்தை காட்டும் நுால்.
– ராம்