தமிழின் அருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற அனுபவ தொகுப்பு நுால். மன்னராட்சி காலம், கட்டடக் கலைகள், இலக்கியம், நாணயம், ஆன்மிகம் குறித்த தமிழக செய்திகள் உள்ளன. சோழர் – சீனர் உறவை நாணயம் வாயிலாக சொல்கிறது.
திருக்குறளை மேற்கோள் காட்டி, நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. தமிழர்கள் முன்னோடிகளாக இருந்ததை, உலகில் பல நாடுகளில் கிடைத்த ஆதாரங்கள் வழியாக விவரிக்கிறது.
பல நாடுகளில் தமிழர்கள் கடைப்பிடிக்கும் கலாசாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உறவுகள் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன. திருவள்ளுவரின் உருவச்சிலை பிற நாட்டில் நிறுவப்பட்ட விபரமும் உள்ளது. உலகம் முழுதும் தமிழர்களை அறிய உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்