(பக்கங்கள்: 354)அருள்மிகு குருவாயூரப்பன், அன்னை அபிராமி ஆகிய தெய்வத் திருவுருவங்கள், இந்த ஆண்டு தீபாவளி மலரை அலங்கரிக்கிறது. அருட் செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சிக்கனமல்ல - சீரமைப்பு என்ற தலைப்பில் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் ஒருசேர சிந்திக்கத் தூண்டும் வகையில் ஒரு கட்டுரை வழங்கியிருக்கிறார். சிறப்புப் பொருளாதார மண்டலம், மின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, விவசாயம் படும் பாடு, ஆகிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இந்தக் கட்டுரையை, "ஐ ஓப்பனர் எனக் குறிப்பிடலாம்.
சிறப்புச் சிறுகதைகள், ஆன்மிக கட்டுரைகள், கவிதைகள் நிறைய நிறைந்துள்ள இந்த வருட தீபாவளி மலர் பாராட்டும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பேட்டியும் அவர் கருத்துக்களும் அருமை.