ஜாதி மோதல் கொலையில் ஈடுபட்டவர், காவல் துறைக்கு அஞ்சி வாழ்ந்ததை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நுால்.
தலைமறைவாக வாழ்ந்த கொடுக்கூர் ஆறுமுக நாட்டாரைக் கொல்ல, பல ஜாதியினர் சேர்ந்து திட்டம் தீட்டியது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காதலித்த பெண்ணின் வீட்டிற்கு வந்தவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விபரமும் உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக எழுதப்பட்ட நாட்டுப்புற பாடலும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு செய்து செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. தகவல்கள் வாழ்க்கை வரலாறு போல் தரப்பட்டுள்ளன. உரிய இடங்களில் ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ள ஆவண நுால்.
– முகிலை ராசபாண்டியன்