கனவுகளின் கதையாக மலர்ந்துள்ள நுால். முதல் நவீனம் என்றாலும் பண்பட்ட எழுத்தாக உள்ளது.
கனவு கண்ட பெண்ணை பற்றி வர்ணிக்கிறார் கதாசிரியர். இடையே சித்தர்கள், அமானுஷ்யம், விஞ்ஞானம் என்று பல திசைகள் நோக்கி பயணிக்கிறது. காணாமல் போன குழந்தையை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்ற, திக்... திக்... பாணி கதை. இதில், இளம் ஜோடிகளின் பார்வை பரிமாற்றங்களை வர்ணிக்கும் விதம் கிளுகிளுப்பு ஊட்டுகிறது.
கஞ்சா என்பது பெயின் கில்லர். ஆஸ்துமா, புற்று நோய் போன்ற வியாதிகளை குணப்படுத்தும் மருந்து. ஆனால், போதைப் பொருளாகிவிட்டது தான் கொடுமை என்கிறது. முடிவில், கொரோனா என்ற வியாதியை உருவாக்க, குழந்தையை பலிகடா ஆக்க எடுத்த முயற்சியை முறியடிக்கிறது இளம் படை. சுவாரசியமான நாவல்.
– சீத்தலைச்சாத்தன்