இலக்கியம் வழியாக இந்திய இதயங்களை இணைக்கும் வகையில் வடகிழக்கு மாநில எழுத்தாளர்களின் பேட்டி, படைப்புகளை கொண்டுள்ள நுால். படைப்புகளை ஆய்வு செய்யும் கட்டுரையும் உள்ளது.
அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், ஒடிசா மற்றும் இமயமலை அடிவாரப் பகுதியில் எழுத்தாளர்களை சந்தித்த இனிய பயண அனுபவம் ஆர்வமூட்டுகிறது. இந்தியாவின் பன்முக கலாசாரமும், வாழும் பண்பாடும் வெளிப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேட்டியும் அந்தந்த மண்ணின் தனித்தன்மையால் இலக்கியம் எப்படி வளம் பெற்றுள்ளன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மூன்றாவது பதிப்பாக மலர்ந்துள்ளது.
– மலர்