முகப்பு » பொது » STEPS TO SUCCESS

STEPS TO SUCCESS

விலைரூ.150

ஆசிரியர் : வானதி திருநாவுக்கரசு

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
தமிழில்: வானதி திருநாவுக்கரசு. ஆங்கில மொழியாக்கம்: டாக்டர் எஸ்.கோபாலி. வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 448. விலை: ரூ.150).

"இன்று நாட்டை வழி நடத்திச் செல்ல தூய்மையான தலைவர்கள் இல்லை. தலைமையற்ற வெற்றிடம் விரிந்து கொண்டே போகிறது' (பக்.14) இப்படி நாட்டைப் பற்றிய அக்கறையுள்ள சிந்தனையாளர் வானதி திருநாவுக்கரசு, தேவகோட்டையில் பிறந்து இன்று தெருவெல்லாம் தமிழ் படிக்க புத்தகப் பதிப்புத் துறையில் புதுமையைப் புகுத்தி சுமார் 4700 நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளார். தமிழின் மீது அளவற்ற பற்றுமிக்க இச்சாதனையாளர் கடந்த 70 ஆண்டுகளாகத் தன் உயர்வுக்குப் படிக்கல்லாய் அமைந்த பல்வேறு நிலையில் உள்ள பெருமக்களை நினைவு கூர்ந்து தமிழில் "வெற்றிப் படிகள்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலை டாக்டர் கோபாலி, மிக எளிய நடையில், சரளமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலில், ஆங்கிலப் புலமைமிக்க டாக்டர் கோபாலியின் இம்மொழியாக்கம் ஆங்கிலம் படிக்க அஞ்சுபவர்களைக் கூட ஆர்வத்தில் ஆழ்த்தும் அற்புத படைப்பு.

தோல்வியில் தொடங்கும் முதல் அத்தியாயம், ஒவ்வொரு தடைக்கல்லையும் வெற்றிப் படிக்கல்லாய் மாற்றும் வித்தகர் வானதி தோல்வியே வெற்றிக்கு அடிப்படை என்பதை தன் கடின உழைப்பாலும், உறுதியான கொள்கைகளாலும் நிரூபித்துள்ளதை அவரது அணுகுமுறைகளை நயம்பட மொழியாக்கம் செய்துள்ளார் <நூலாசிரியர்.

காஞ்சி மாமுனிவர், வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள், ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, ம.பொ.சி., எம்.ஜி.ஆர்., போன்ற அரசியல்வாதிகள், அ.ச.ஞா., சா.கணேசன் போன்ற அறிஞர்கள், கண்ணதாசன், வாலி, தூரன், அழ.வள்ளியப்பா போன்ற கவிஞர்கள், நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் போன்ற இசைக் கலைஞர்கள் தவிர இலக்கியச் சிந்தனை, கம்பன் கழகம் போன்ற அமைப்புகளுடனும், தொடக்க காலத்தில் தனக்கு உறுதுணையாய் இருந்த லேனா தமிழ்வாணன், சின்ன அண்ணாமலை, இன்ப நிலையம் சுவாமிநாதன் இப்படிப் பலதரப்பட்டவர்களிடமும் தமக்கிருந்த தொடர்பை மலரும் நினைவுகளாகப் படரச் செய்துள்ளார்.

செட்டிநாட்டில் வழங்கும் நாட்டுப்புற பாடலொன்றும், பாரதியின் "மனதில் உறுதி வேண்டும்' பாடலும்தான் சோர்வும், வருத்தமும் ஏற்படும் நேரங்களில் தெம்பையும், புத்துணர்ச்சியையும் ஊட்டின என்று கூறும் பதிப்பகச் செம்மல் தனது அறையில் மகாத்மா காந்தி, பாரதி, காமராஜ், காஞ்சி மாமுனிவர் படங்களை பெரிய அளவில் மாட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் அவ்வப்போது தம்மைப் பாதுகாத்தும், வழிகாட்டியும், புத்துணர்வூட்டியும் அற வழியில் தொடர்ந்து முன்னேற தமக்குத் துணையாக இருப்பதாக உணருகிறேன் என்று கூறும் உழைப்பால் உயர்ந்த இம்மாமனிதரின் வாழ்க்கை முன்னேற்ற நூல், மிக அற்புதமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. படிக்க, ரசிக்க, பயன்மிக்க நல்ல நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us